Tuesday, 30 June 2015

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்...!!


சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.

ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.

எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.

விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.

தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.

உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.

உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது

1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.

கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.

கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்

Monday, 29 June 2015

தமிழ்நாட்டின் சிறப்பான உணவு வகைகள்


1. மதுரை - சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

6. கும்பகோணம் பூரி-பாஸந்தி

7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

8. மன்னார்குடி அல்வா

9. கூத்தாநல்லூர் தம்ரூட்

10. நீடாமங்கலம் பால்திரட்டு

11. திருவையாறு அசோகா

12. கும்பகோணம் டிகிரி காபி

13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா

14. கோவில்பட்டி கடலை மிட்டாய்

15. ஆம்பூர் தம் பிரியாணி

16. நாகர்கோவில் அடை அவியல்

17. சாத்தூர் சீவல்

18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்

21. மணப்பாறை அரிசி முறுக்கு

22. கீழக்கரை ரொதல்அல்வா

23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

24. பண்ருட்டி முந்திரி சாம்பார்

25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

26. சாயல்குடி கருப்பட்டி காபி

27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா

28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

30. புதுக்கோட்டை முட்டை மாஸ்

31. தூத்துக்குடி மக்ரூன்

32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி

33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்

2. வாழைப்பழ தோசை

3. எண்ணெய் கத்தரிக்காய்

4. பால் பணியாரம்

5. பூண்டு வெங்காய குழம்பு

6. ரவா பணியாரம்

7. பால் கொழுக்கட்டை

8. சேமியா கேசரி

9. மோர் குழம்பு

10. நாட்டுகோழி மிளகு வறுவல்

11. இறால் தொக்கு

12. நட்டுக் கோழி ரசம்

13. நண்டு மசாலா

14. வெண்டைக்காய் புளிக்கறி

15. பருப்பு சூப்

16. ரிப்பன் பக்கோடா

17. பருப்பு உருண்டை குழம்பு

18. குருமா குழம்பு

19. தேன்குழல்

20. கருப்பட்டி பணியாரம்

21. சீயம்

22. மாவுருண்டை

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

விடுபட்டவை விரைவில்.

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு..


நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்...

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க...

இந்த தண்ணி உடலுக்கு குளிா்ச்சியும் கூட..

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்..

எந்த மண்ணில் எந்த வகையான மரங்களை வளர்கலாம் என்று பாா்க்கலாம்!


கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் : குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் : ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேலம்.

மரம் வளா்ப்போம்.. மழை பெறுவோம்.

அந்த காலத்துல எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்துல எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க???

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ? நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள். சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். எப்படியெல்லாம் யோசிச்சு இருக்காங்க பாருங்க..

Thursday, 25 June 2015

வாட்டர் தெரபி



காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.

தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது
1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,

2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,

7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,

4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,

3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,

10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,

மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

மனிதன் தன் வாழ்நாளில் பயணிக்கும் பருவங்களின் பெயா்கள்


மனிதன் தன் வாழ்நாளில் பயணிக்கும் பருவங்களின் பெயா்கள் இதோ..

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

வேலிகாத்தான் மரங்கள்


நான் படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும் காட்சியில், வேலிகாத்தான் மரங்களுக்கு முதலிடம் உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர் நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை வேலிகாத்தான் மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக வேலிகாத்தான் மரங்களே இருந்து வருகின்றன. பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு வேலிகாத்தான் மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த வேலிகாத்தான் மரங்களால் ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த வேலிகாத்தான் மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த வேலிகாத்தான் மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு: வேலிகாத்தான் மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், வேலிகாத்தான் மரங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், தற்போது வேலிகாத்தான் மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்: வேலிகாத்தான் மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. வேலிகாத்தான் மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை வேலிகாத்தான் மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் வேலிகாத்தான் மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.

கொடூரமும், கோரமும்: பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி தரும் வேலிகாத்தான் மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை வேலிகாத்தான் மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த வேலிகாத்தான் மரங்களை என்னவென்று அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து வருகிறோம். வேலிகாத்தான் மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை! நிலத்தடி நீரை பால்படுத்தும் வேலிகாத்தான் மரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் வேலிகாத்தான் மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில் உள்ளது. இதை அறியாமல் வேலிகாத்தான் மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் வேலிகாத்தான் மரங்கள் காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் வேலிகாத்தான் மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும்.

நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த வேலிகாத்தான் மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாகவே வேலிகாத்தான் மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு வேலிகாத்தான் மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்! உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள் எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் வேலிகாத்தான் மரங்களை மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை களங்கப்படுத்தும் இந்த வேலிகாத்தான் மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், வேலிகாத்தான் மரங்களை அழிப்பதற்காவது முன்வாருங்கள். இம்மாவட்டத்தில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே அளவுக்கு வேலிகாத்தான் மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம்' கோஷத்தில், "வேலிகாத்தான் மரங்களை அகற்றுவோம்,' என்ற, கோஷமும் இணைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் "கெட் அவுட்': உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், வேலிகாத்தான் மரங்களை வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம ஊர் வேலிகாத்தான் மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் வேலிகாத்தான் மரங்கள், வீட்டின் வேலிகளாக வேலிகாத்தான் மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, வேலிகாத்தான் மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.

கேரள குளுமைக்கு காரணம் என்ன? ராமநாதபுரம் மாவட்டவாசிகள் கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், கேரளாவுக்கு செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், வேலிகாத்தான் மரங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு வேலிகாத்தான் மரங்களை காணமுடியாது. இங்குள்ள வேலிகாத்தான் மரங்களை அகற்றினால், நமது மாவட்டமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு காரணம் வேலிகாத்தான் மரங்களின் தலையீடே ஆகும்.

காசு செய்யும் வேலை: உதாசீணப்படுத்தப்பட்ட வேலிகாத்தான் மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் வேலிகாத்தான் மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் வேலிகாத்தான் மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக வேலிகாத்தான் மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை வேலிகாத்தான் மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், வேலிகாத்தான் மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் வேலிகாத்தான் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். ­­­

வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...: தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.

வேலிகாத்தான் மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை: மாவட்டத்தில் வேலிகாத்தான் மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என வேலிகாத்தான் மரங்களின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற வேலிகாத்தான் மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க வேண்டும். இரும்பு கரம் கொண்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.

உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...: வறட்சி, பின்தங்கி மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க வேலிகாத்தான் மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த வேலிகாத்தான் மரங்களை ஏலம் எடுப்பது, எடுத்து தருவதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் வேலிகாத்தான் மரங்கள் வளர்வதை தான் மக்கள் பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.

விவசாயிகள் சொல்வதென்ன...

ஸ்ரீதர்(உத்தரகோசமங்கை): கீழக்கரை, திருப்புல்லாணி உள்ள அதிகமான வேலிகாத்தான் மரங்களால், விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு மாறி விட்டனர். இவற்றின் வேர் பூமியின் கடைசி பகுதி வரை செல்வதால் நிலங்கள் கடுமையான வெப்பத்தை சந்திக்கிறது. நிலத்தடி நீரை காப்பாற்ற வேலிகாத்தான் மரங்களை ஒழிக்க வேண்டியது அவசியம்.

சேக்அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்): திருவாடானை தாலுகாவின் கடற்கரை பகுதிகளில் வேலிகாத்தான் மரங்கள் அதிகமாக உள்ளன. இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். வேலிகாத்தான் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு நல்ல மரங்களை நடுவு செய்தால், அதன் பலனை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கலாம்.

சுகுமாறன்(பரமக்குடி): வேலிகாத்தான் மரங்களால் காற்று மாசுபடுகிறது. இதைதடுக்கவேலிகாத்தான் மரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை தடுக்கவும், ராமநாதபுரத்தை வறட்சியிலிருந்து மீட்கவும் வேலிகாத்தான் மரங்கள் ஒழிப்பு கோஷம் ஓங்க வேண்டும்.

ராசு(கமுதி): வேலிகாத்தான்
மரங்களால் வெயில்காலத்தில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. வேலிகாத்தான் மரங்களை வெட்டி எத்தனையோ பேர் பிழைப்பு நடத்துகின்றனர். இருந்தாலும் , இதை அழித்தால் விவசாயம் கைகொடுக்கும் என்பதால் பாதிப்பு வராது.

திருநாவுக்கரசு (எஸ். எம். இலந்தைக்குளம், கடலாடி): மித மழையில் விளையும் மிளகாய், குறுகியகால பயிரான தக்காளி, கத்தரிக்காய் போன்றவையும் வேலிகாத்தான் மரங்களால் பாதித்துவிட்டது. இவற்றை அகற்றவில்லை என்றால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் இடம் பெயருவதை தவிர வேறுவழியில்லை.

அழிக்க வேண்டியது அவசியம்...: மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் வேலிகாத்தான் மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம் துரிதமாக பணி நடக்க வேண்டும்.

எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள வேலிகாத்தான் மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் வேலிகாத்தான் மரத்தை வேருடன் அழிக்கவேண்டும் .

விசிறி பற்றி நீங்கள் அறியாத தகவல்


 
விசிறி பற்றி நீங்கள் அறியாத தகவல்..

பனை விசிறி:

சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும்.

மயில் தொகை விசிறி:

அறிவை வளர்க்கும், தலை சுற்றலை போக்கும், விக்கல் மற்றும் வயிறு வலி நீங்கும்.

வெட்டிவேர் விசிறி:

தேக எரிச்சல், நீர் வேட்கை நீங்கும், மன ஊக்கத்தைக் கொடுக்கும்.

மா்மமான கற்கோள உருண்டைகள்


1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.

சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன. மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்கமுடியும் எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது....

Friday, 12 June 2015

Keyboard Shortcuts (Microsoft Windows)


More than 100 Keyboard Shortcuts must read & Share

1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts

1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

MMC Console keyboard shortcuts

1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts

1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)
11. CTRL+W (Close the current window)

share with others...

தொிந்து கொள்வோம்


1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு
ம் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாகஇறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி -
”கொசு”

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick -இதுவே ஆங்கிலத்தில் மிகவும்
கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல (111,111,111 x 111,111,111)
பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான
கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர்
கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்'
நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

ஆச்சரியப்படும் உண்மைகள் : smile emoticon

1. குதிக்க முடியாத ஒரே உயரினம் யானை தான்.

2. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.

6. ஒருவர்
சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

7. 67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

8. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

மரங்கள் நடும் முறை



அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை நன்கு தயார் செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும்.

மரங்களின் வகைகள்
அலங்கார மரங்களை மலர் மரங்கள் , நிழல் மரங்கள் , இலை அழகு மரங்கள் என 3 பிரிவுகளாகப்பிரிக்கலாம்.

மலர் மரங்கள்

பேய் மரம்
இனிய மணமுடைய வெண்மை நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும் காய்கள் 30 -50 செ.மீ நீளம் கொத்தாகத் தொங்கும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மந்தாரை
இலைகள் ஒட்டகத்தின் கால் தடத்தைப் போன்ற வடிவில் இருக்கும் மலர்கள் இளஞ்சிவப்பு , வெள்ளை , வெள்ளை மலர்களில் சிவப்பு கோடுகள் , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பத்திரி
தொங்கும் கிழைகளில் பளபளக்கும் இலைகளைக் கொண்ட மரம் . வெண்மை நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் தோன்றும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொத்துக் கொத்தாக பூக்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பொரச மரம் (காட்டுத் தீ)
இலைகள் முழுவதும் உதிர்ந்த பிறகு பூக்கள் தோன்றும். ஆரஞ்சு – சிவப்பு நிறத்தில் காணப்படும். காய்கள் ஒரே விதையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பாட்டில் பிரஷ் மரம்
இம்மரத்தின் மலர்கள் பாட்டில்கள் கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் பிரஷ் போன்று இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பூக்கள் சிவப்பு சிறத்தில் இருக்கும். பதியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

சரக்கொன்றை
சித்திரைக்கன்னி என்று மற்றொரு பெயரும் உண்டு. பிப்ரவரி – மே மாதங்களில் இடைவெளி இல்லாமல் ஒரே மஞ்சள் நிற பூக்கள் சரஞ்சரமாக தொங்கும் இம்மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

கல்யாண முருங்கை
மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு சிவப்பு மலர்க்கொத்துகளை தாங்கி நிற்கும் . பெரிய போத்துகளை நடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஜெகரான்டா
அழகான சிறிய இலைகளைக் கொண்ட இம்மரம் இலைகளை உதிர்த்தவுடன் மார்ச் – மே மாதங்களில் நீண்ட நீல நிற மலர் கொத்துகளைத் தாங்கி நிற்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

நிழல் மரங்கள்

(உம்) குன்றுமணி மரம், வாகை, வேம்பு, இலுப்பை, டிவிடிவி, ஈட்டி, தூங்கு மூஞ்சி, நாவல் , ஆலமரம், அரச மரம், புங்க மரம் , மகாகனி, புளிய மரம், தேக்கு, மருத மரம.

இலை அழகு மரங்கள்

(உம்) கிறிஸ்துமஸ் மரம், தூஜா, பெரனி மரம், புளுமேரியா, அழகு ரப்பர், கறிப்பலா, சவுக்கு மரம், தைல மரம், சில்வர் ஓக், நெட்டி லிங்கம் , பாதாம் மரம்.

அலங்கார குத்து செடிகள்

குத்து செடிகள் மரங்களைவிட சிறியதாக இருக்கும். அவற்றை தனியாக நடுவதை விட கூட்டமாக நடுவதே நல்லது. குத்து செடிகளிலும் மலர் அழகுச் செடிகள் மற்றும் இலை அழகுச் செடிகள் உள்ளன. அலங்கார குத்து செடிகளை வேலியாக அல்லது தடுப்பு சுவராகப் பயன்படுத்தலாம்.

இலை அழகு குத்துச் செடிகள்

(உம்) அகாலிபா, குரோட்டன்ஸ் , டுராண்டா, இராண்திமம், கிராப்டோபில்லம், காட்டாமணக்கு, லட்சக்கோட்டை போன்றவையாகும்.

மலர் அழகுச் செடிகள்

பார்லேரியா, பாகினியா, காகிதப்பூ, சிசால்பினியா, சேஸ்ட்ராம், கேசியா, டோம்பியா, யுபோர்பியா, ஹேமிலியா, செம்பருத்தி , மல்லிகை , முல்லை, ஜாதஜ , லண்டார்ணா, மருதாணி, முசாண்டா, அரளி, பவள மல்லி, பெண்டாஸ், பிளம்பாபோ, டேக்கோமா போன்றவைகள் ஆகும்.

குத்துச் செடிகள் நடும்முறை

குத்துச் செடிகள் தரையில் நடுவதற்கு முன் நிலத்தில் குழிகள் எடுக்க வேண்டும் குழிகளின் அளவு 1 ½ x 1 ½ x 1 ½ அடி நீளம் , அகலம் , ஆழம் ஆகும். குழிகளில் மக்கிய தொழு உரம் , செம்மண் , மணல் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சமமான அளவுகளில் இட வேண்டும். பின் மழைக்காலங்களில் , பாலிதீன் பைகளில் நன்கு வளர்ந்த அலங்கார குத்து செடிகளை பராமரிக்கலாம். செடிகள் துளிர் விட்டு நன்கு வளரும் போது பூச்சி , நோய்கள் ஏதாவது தென்பட்டால் அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்த பிறகு செடிகளைச் சுற்றி உரம் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

அலங்கார வேலிச் செடிகள்

வேலிச் செடிகள் நடுவதற்கு 60 செ.மீ அகலம் 90 செ.மீ ஆழமுள்ள நீளமான குழி வெட்ட வேண்டும். பின்னர் குழியில் மக்கிய மாட்டு எரு அல்லது மக்கிய இலைகளுடன் மண்ணையும் கலந்து நிரப்ப வேண்டும். மழைக்காலத்தில் விதைகளை அல்லது போத்துகளை 2 அல்லது 3 வரிசைகளில் நட்டு அடாத்தியான வேலி அமைக்கலாம். விதைகள் முளைக்காமலோ அல்லது போத்துகள் துளிர்க்காமலோ இடைவெளி ஏற்பட்டால் உடனே அதை நிரப்ப தினக் கவனம் செலுத்த வேண்டும். நட்ட 6 மாத காலம் வரை வாரம் ஒரு முறையும் பிறகு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. வேலிச் செடிகளை சதுரமான வடிவில் அமையுமாறு வெட்டி விட வேண்டும். மேல் பாகம் அடிப்பாகத்தை விட அகலமாக இருக்க கூடாது. வேலிச் செடிகளை வேண்டிய உயரம் வரை வளர விட்டு பின்பு வெட்டி விடுவதைக் காட்டிலும் முதலில் 30 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். சில காலம் வளர விட்டு இரண்டாவது தடவை 45 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக உயரத்தை கூட்டி வேண்டிய உயரம் வரை கொண்டு வந்தால் வேலி அடர்த்தியாக இருக்கும்.

(உம்) அகாலிபா, காகிதப்பூ, கிளிரோடென்ரான், டுரான்டா, குப்ரசஸ், செம்பருத்தி, ஹேமிலியா, மெனியா, சவுக்கு, அரேலியா, மருதாணி போன்றவைகள் ஆகும்.

அலங்காரக் கொடிகள்
வளர்க்கும் முறை

குழிவெட்டி (1 x 1 x 1மீ) குழியில் மண்ணுடன் சம அளவு மக்கிய எரு கலந்து நிரப்பி குளிர தண்ணீர் விட வேண்டும். கொடிகள் பெரும்பாலும் பதியங்கள் , தண்டுகள் அல்லது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். கொடி படர்ந்து வளர்வதற்கான பற்றுக் கோல் மற்றும் இதர சூழ்நிலைகளை செடி நட்டவுடனேயே அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் கொடிகளை அவ்வப்போது நீக்கி வந்தால் கொடி கவர்ச்சியுடன் வளரும்.

அலங்காரக் கொடிகளின் வகைகள்
அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி

வீட்டினுள் வளர்க்க ஏற்ற இடங்களும் அழகு செடிகளும்
பொதுவாகவே வீட்டைச்சுற்றி அலங்கார செடிகள் மற்றும் இயற்கைப் பொருட்களான கற்கள், நீர்ச் செடிகள் முதலியவற்றை உபயோகித்து அழகுபடுத்துவதன் மூலம் வீட்டின் அமைப்புக்கு ஒரு இயற்கையோடு இணைந்த சூழலை ஏற்படுத்த முடியும். இது போன்றே வீட்டில் உட்பகுதியிலும் பலதரப்பட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம் வீட்டின் உட்பகுதியை நன்கு அழகுறச் செய்யலாம். இவை இயற்கையோடு இணைந்த சுற்றுப்புற சூழலையும், மன அமைதி மற்றும் புத்துணர்வை நமக்கு தருகிறது.

Thursday, 11 June 2015

காசு, பணம், துட்டு, மணி மணி..


நாம் செலவு செய்வதற்காக ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது.

அதுபற்றிய விபரங்களை இன்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 47 பைசா

பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 96 பைசா

இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 46 பைசா

ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்ம் செலவு = 1 ரூபாய் 81 பைசா

நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 79 பைசா

500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 3 ரூபாய் 58 பைசா

ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 4 ரூபாய் 6 பைசா
இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்...

100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.

எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது.

இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக் கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள்.
ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும். அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றி விடுவார்கள்.

ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும்,
சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India.
கூடுதல் தகவல் என்னவெனில்...

ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லை யென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன.

இதுல நீங்க எப்படி??


நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.
தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.
நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.
மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.

--------------------------------------------------------------------------

நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன்.
இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.
உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.
இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.
பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.
அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.
இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்நீங்கள்

--------------------------------------------------------------------------

மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர். இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர். சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

--------------------------------------------------------------------------

நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.
மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.
ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.
பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;ன விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை… அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்

--------------------------------------------------------------------------

ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?

5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\’ என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.
பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி… பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.
ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர்.
ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர்.
சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் கலைத்துறையில்\’ ஜாம்பவான்களாக இருப்பர்.

--------------------------------------------------------------------------

நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?

6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.
எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.
எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்குமுன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.
இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

--------------------------------------------------------------------------

நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.
வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்ட இவர்கள், காதல் வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.
புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர்.
பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.
நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.
அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.

--------------------------------------------------------------------------

நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?

8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!
இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர். எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.
8ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

--------------------------------------------------------------------------

நீங்கள்9 எண்ணில் பிறந்தவர்களா?

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.
இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.
கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.

- இதுல நீங்க எப்படி??

Tuesday, 9 June 2015

குமாிக்கண்டம்


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்..

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.

இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே. முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !

நம்பினால் நம்புங்கள் !!


1896 இல், பாரீஸில், பிரிட்டிஷ் தூதராக இருந்த ஹாமில்டன் ப்ளாக்வுட் என்பவர் சந்தித்த, தலைசுற்ற வைத்த ஆவி அது.

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்வுட் அயர்லாந்துக்கு சென்றபோது ஆபேலி என்கிற ஊரில், பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். ஓரிரவு, நல்ல தூக்கத்தில் இருந்த அவருடைய காதுகளில் விபரீதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விழித்துக் கொண்டபிறகும் எங்கேயிருந்தோ அழுகைக் குரலும், யாரோ விம்மிக் கதறுவது போன்ற சத்தமும் கேட்க, எச்சரிக்கையுடனும் ஆர்வத்துடனும் எழுந்து வெளியே வந்தார் ப்ளாக்வுட்.

மீண்டும் கரகரத்த குரலும் அமானுஷ்யமான (நரியோ, நாயோ) ஊளையிடும் சத்தமும் தோட்டத்திலிருந்து வருவது போலத் தோன்றியது.

துணிச்சலைக் கூட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கித் தோட்டத்துக்கு சென்றார் ப்ளாக்வுட். முந்தைய மாலையில் பார்த்தபோது அந்தத் தோட்டம் அழகிய சோலையாக இருந்தது போல நினைவு. இப்போது சற்று மாறியிருந்தது. மரங்கள் கரடுமுரடாக இருந்தன. ஏராளமாக மண்டியிருந்த புதர்களுக்கு இடையே ஆங்காங்கே சிலுவைக் குறிகளோடு பழைய கல்லறைகள்!

மெல்ல முன்னேறினார் ப்ளாக்வுட். சற்றுத் தொலைவில், மரநிழலில் எதோ நிழலாடியது போல இருந்தது. 'யார் நீங்கள்?' என்று உரக்கக் கேட்டவாறு நடையை வேகப்படுத்தினார் தூதர். அவருக்கு முன்னே முப்பது அடி தொலைவிலே ஓர் உருவம் மெல்லக் குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் தோளில் ஒரு சவப்பெட்டி!

'கொஞ்சம் நில்லுங்கள்!' என்றார் ப்ளாக்வுட் குரலை உயர்த்தி. அந்த உருவம் குனிந்து சவப்பெட்டியைக் கிழே வைத்துவிட்டு மெல்லத் திரும்பிப் பார்த்தது. அந்தக் கொடூரமான வெளிறிய முகத்தையும், மிருகத்தனமாகப் பளிச்சிட்ட கண்களையும் பார்த்தவுடன் சற்றுக் கலவரமடைந்து நாலடி பின்வாங்கினார் ப்ளாக்வுட்.

அந்த உருவம் தன் இடது கரத்தை எச்சரிக்கையாக உயர்த்தி 'வராதே' என்பது போலச் சைகை செய்தது. பிறகு மங்கலாகி மறைந்து போனது!
குழப்பத்தோடும் பதட்டத்தோடும் தன் அறைக்குத் திரும்பிய ப்ளாக்வுட், மறுநாள் காலையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தோட்டம் பழையபடி சாதாரணமாக, அழகாக இருந்தது!
ஓராண்டுக்குப் பிறகு...
பிரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட ப்ளாக்வுட்டுக்கு பாரிஸ் நகரில் உள்ள பிரபல க்ராண்ட் ஹோட்டலில் வரவேற்ப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்து முடிந்தவுடன் தன் உதவியாளர்களுடன் லிப்டில் ஏறச் சென்றார் ப்ளாக்வுட். அதற்குள் லிப்ட்டில் நிறைய பேர் நுழைந்தார்கள். தூதர் என்பதால் ஓரிருவர் பணிவுடன் வெளியே வந்து அவருக்கு வழிவிட்டார்கள். ப்ளாக்வுட் உள்ளே நுழைய நகர்ந்தபோது அவர் பார்வை லிப்டுக்குள் நிலை குத்தியது.
அங்கே அவரையே உற்றுப் பார்த்தவாறு அந்த லிப்ட் ஆபரேட்டர்! திடுக்கிட்டுப் போனார் தூதர்.
முன்பு அயர்லாந்தில் மாளிகைத் தோட்டத்தில் சவப்பெட்டியோடு சென்ற அதே உருவம்! அதே கொடூரமான விழிகள்!
அந்த உருவம் கூர்ந்து தூதரை வெறித்துப் பார்த்து மெல்லத் தலையசைத்தது.
கலவரத்தில் ஆழ்ந்த ப்ளாக்வுட் லிப்டில் ஏறவில்லை. கதவுகள் மூட, லிப்ட் மேமே கிளம்பியது. ரிசப்ஷனுக்கு ப்ளாக்வுட் திரும்பிய சமயம், லிப்ட் உள்ளேயிருந்து பயங்கரமான சத்தம் கேட்க, எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.
அங்கே, கேபிள் அறுந்து படுவேகமாகக் கிழே விழுந்து, லிப்டில் உள்ள எல்லோருமே இறந்திருந்தனர். குறிப்பாக, அந்த லிப்ட் ஆபரேட்டரின் உடலை தூதர் கவனித்தபோது... அவன்... அதன் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.
பல பத்திரிக்கைகளில் உண்மை நிகழ்ச்சி என்ற தலைப்பில் வெளியான வியப்பேற்படுத்திய பேய்கதை இது!

மோட்டர் வாகனச் சட்டமும், அபராதமும்


தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக..

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court

8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine

வாகன விதிகளை மதிப்போம், விபத்தின்றி வாழ்வோம்.

அமுக்குவான் பேய்



இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல்
இருக்கும்.

உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும்
திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்
கழித்துத்தான் உங்களால் எதுவும்
செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும்
அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான்
அமுக்குவான் பேய்.

உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான
பேய் இல்லை என்றாலும், இதுவும்
ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப்
புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய்
அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல்
புளியமரத்திலோ வேப்பமரத்தின்
உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின்
இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின்
கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக
சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான்
பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.
இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன்
உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில்
இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம்
அவை பகலில் கூட வரும். என்றெல்லாம்
சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான்
ஆனால் அது உண்மை இல்லையே,

என்ன செய்வது?
நம்மூரில் அமுக்குவான் பேய்
என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க
பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட
பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக்
கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால்
இது வருகிறது.

துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம்
என்பது ஒரு நபரின் வாழ்க்கையில்
எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த
நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும்
பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க
பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட
இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட
தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.
துயில் மயக்க நோய்
உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக்
கொள்பவர்களில் 50 சதவீதம்
பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள்
இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக்
கொண்டு மந்திரவாதிகளைத்
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள்
விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

பிடித்திருந்தால் Like & share பண்ணுங்க.

Wednesday, 3 June 2015

பனையின் பயன்கள்



பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.