Monday, 20 July 2015

அறிந்து கொள்வோம்


உலகில் உள்ள மரங்களில் மில்லியனுக்கும் மேற்பட்டவை அணில்களால் உருவானவை என்றால் நம்ப முடிகிறதா.?

ஆம் அணில் தான் மழை காலத்திற்கான உணவை (விதைகள்) மண்ணில் புதைத்துவிடும் மழை காலத்தின் பொழுது அவை தான் புதைத்து வைத்த பாதி விதைகளை மறந்துவிடும் அவையே மரமாக வளர்கின்றன.



இவை எகிப்து'ல் கிடைக்கப்பெற்ற கல் சிற்பம்..
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது....
இன்று நாம் பயன்படுத்தும் விமானம் அன்றைய எகிப்து நாகரிகத்தில் எப்படி...?
கேள்விக்கான முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்....



இரும்புத்தூண் – டெல்லி..!

டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது ஆச்சாியமே.!

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!


இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

நதிகளும், அமொிக்காவின் சதிகளும்


உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதி தான்.

இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள். அமெரிக்காவால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸிஸிபி நதிதான் என்று அடம் பிடித்தது.
இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது.
அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நைல் என்பது ஒரே நதி.

ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை.
மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன.
இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்க வில்லை.

இதேபோல்தான் நயாகரா விஷயத்திலும் நடந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ருவைரா நீர்வீழ்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. இங்கு ஒரு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 காலன் நீர் விழுகிறது.

ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது.

உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது.

வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.
அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை.
லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி.

இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான்.
ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான்.
அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அடம்பிடிச்சு சாதிப்பது இது தானோ??

தமிழ் இனி..


தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே கட்டுரையாக..

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.

2. உறவுகளை அழைக்கும் போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப் பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிர்ப்படுபவர் தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது முகவரி அட்டை (VISITING CARD) களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிர்ப்படுபவரிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் அஞ்சல் தாள் (LETTER HEAD) போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள்.

8. திருமணப்பரிசு அளிக்கும் போது நல்ல தமிழ்ப் புத்தகங்ககளை அளியுங்கள்.

9. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

10. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

11. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

12. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

13. எதெற்கெடுத்தாலும் ‘EXCUSE ME’ என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்... மன்னிக்கனும்... மன்னிச்சுங்குங்க... என்று சொல்லுங்கள். அதே போல் ‘PLEASE’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

14. மகிழுந்துகளில் செல்லக் குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

15. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

16. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. (தமிழ் வளரும்).

இதை நடைமுறைக்கு கொண்டு வருவது சிரமம் காரணம் நாம் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம் நாம் நினைத்தால் போறாது அனைவரும் இதை செயல் படுத்த முயற்சி எடுக்க வேண்டும். எல்லோரும் இதை முயற்சிப்போம்.

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’


அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Area 51 !!


நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...ஏதோ என்னால் முடிந்தது....

#பொருத்தமான இடத்தில் படங்கள் போட முடியமையினால் அந்த இடத்தில் படங்களுக்கான links இணைக்கப்பட்டுள்ளது
ஏரியா 51 என்பது வேற்றுகிரகவாசிகளை பரிசோதிக்கும் இடமாக உள்ளது. இது எப்போது ஒரு ரகசிய யாடமாகவே இருக்கிறது. "Independence Day" என்ற ஆங்கில படத்தில் கூட அந்த இடம் தெளிவாக காட்டி இருப்பார்கள். மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவத்தளம் தான் இந்த ஏரியா 51. நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின்(Groom Lake) தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத்தளம். இந்த இராணுவ தளத்தின் முதன்மை வேலையானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதுதான்.

https://lh5.googleusercontent.com/-Yr1LW6Dmdyo/TXX0cxDsYPI/AAAAAAAAHj8/NIwZiYaOelA/s1600/uf001-50.jpg

அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, அதன் அருகிலுள்ள 186 மைல் (300 km) மொஜாவெ பாலைவனத்தின்(Mojave desert) எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே சொல்கிறார்கள்.

https://lh3.googleusercontent.com/-0QJNKK4s0Ck/TXX0enyz13I/AAAAAAAAHkE/Xk1mEAmAq-w/s1600/area-51-1.jpg

இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது. யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 miles (64 km) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.

குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க விமானப் படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது.லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது தான் ஆச்சர்யம்.

https://lh6.googleusercontent.com/-cQM_SeKGo2M/TXX0boUmazI/AAAAAAAAHj0/P1kJHC3Cg50/s1600/area-51.jpg

இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன.நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.

ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950-களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது.

https://lh6.googleusercontent.com/-0GGg4pAZDPs/TXX0a0jtAuI/AAAAAAAAHjw/ukSqQ5hQzeI/s400/area_51.jpg

ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் Ph.D பட்டத்தையும் வாங்கினார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:

https://lh6.googleusercontent.com/-KacDQhnLueM/TXX0cAGE96I/AAAAAAAAHj4/-UwQz8QA90Q/s400/area51ufo2.jpg

* 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.

* 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.

* டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."

* வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.

* இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.

* ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.

* NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.

https://lh4.googleusercontent.com/-D8h382MjY6g/TXX0fo0cwsI/AAAAAAAAHkI/eBDXWWRxBUo/s640/Area_51_28_August_1968_4.jpg

* திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

* சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.

* ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.

* ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மேலும் இந்த லிங்கில் சென்று வேற்றுகிரகவாசிகளின் படங்கள் மற்றும் இந்த பூமியில் அவர்கள் வந்து போன தடயத்தை விட்டு சென்றுள்ளதையும் காணலாம்.

http://www.spicx.com/2011/04/aliens-photo-collection-250-images.html

திருப்தியா நண்பர்களே ?

எலிகள் பற்றிய தகவல்கள்



எலி (rat) பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி. சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன.

மேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்குதெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும்.

சுண்டெலி
எலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி. இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்) வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை. புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை. வீடுகளிலில் அட்டகாசம் செய்வதும் இவைதான்.

வெள்ளெலி
பெயருக்கு ஏற்ப இவ்வகை எலிகளின் அடிப்பாகம் வெண்மை நிறமாகவும் உடலின் மேல்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். இந்த எலி மனிதர்களால் உண்ணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் வரப்புகள், புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை. பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன. இவ்வித எலிகள், வேறு வேறு இடங்களில் இரண்டு, மூன்று வளைகள் தோண்டி அவை அனைத்திற்கும் பூமிக்குள் ஒன்றுக்குகொன்று தொடர்பை ஏற்படுத்தி விட்டிருக்கும். இவை இரவில் இரை தேடும் இயல்புடையவையாகும். புன்செய் தானியங்களை சேகரித்து வளைக்குள் சேமித்து வைத்து இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுதும். பல எலிகள் கூட்டாக வாழும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை மண்ணால் அடைத்து வைத்திருக்கும். அப்படியும் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக வளைதோணடி மேல் மண்ணைத் திறக்காமல் வைத்திருக்கும். அதை மக்கள் மூட்டு என்று அழைப்பார்கள். வளை வழியாக ஆபத்து வரும்போது மூட்டை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளும்.
கருவுற்ற எலி கூட்டமாக வாழும் எலிகளின் மத்தியில் குட்டிகளை ஈன்றால் பிற எலிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் கருவுற்ற எலியும் ஆணெலியும் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வளை தோண்டி அதில் தங்கி குட்டிகளை ஈன்று வளர்க்கும். ஒரே ஒரு வளை மட்டுமே காணப்பட்டால் அது குஞ்சுகள் வளரும் வளை என கணித்து விடலாம். கூட்டமாக எலிகள் வாழும் எலி வளைகளை வளையின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு அடி உள்ளே தள்ளி வளையை மண்ணால் மூடியிருக்கும். ஆனால் குட்டிகள் வளரும் வளையை நுழை வாயிலிலேயே மூடியிருக்கும். இந்த எலி வளை தோண்டுதல், இரை தேடுதல், பகைவர்களிடமிருந்து காத்துகொள்ள ஓடுதல், எதிர்காலத்திற்கு உணவை சேமித்தல், இரை தேடியபின் தினசரி வளையை மண்ணால் மூடுதல் ஆகிய வேலையை செய்வதால் இவை வலிமையோடு இருக்கும்.

மூஞ்சூறு
இந்த எலி வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இது வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலி மக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலியை யாரும் கொல்வது இல்லை. பெட்டி, பீரோ, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.

கல்லெலி
இது சுண்டெலியை விட சற்று பெரியதாக காணப்படும். கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும். இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும். கொல்லையில் இவை காணப்பட்டாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை.

சரவெலி
இந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும், நார்களாலும் கூடுகட்டி வாழும். இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும். பகலில் மரத்திலிலேயே இருக்கும்.

பெருச்சாளி
இந்த எலி உருவத்தில் பெரியது. அதனால், இதனை கிராமத்து மக்கள் பெருச்சாளி என்று அழைக்கின்றனர். இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே வசிக்கும். வேலியோரங்கள், கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும். இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர். தோட்டத்தில் உள்ள கிழங்குகள், தானியங்கள், மனிதர்களால் வெளியில் வீசப்படும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.

வயல் எலி
இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேதத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.