கடம்ப மரங்கள் பொதுவாக இவை நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும்,.இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம் (வாடிய மரத்தண்டு ) வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று என்பது வரலாற்று உண்மை.
முன்பு கடம்ப மரத்தைப் பற்றி தொியாத ஆட்களே இல்லை.. ஆனால் இன்று மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆராய்ந்து பாா்க்கும் போது, ஒரு கடம்ப மரம் கூட இல்லை என்பது வருத்தத்திற்கு உாிய செய்தி.

No comments:
Post a Comment