Monday, 20 July 2015

அறிந்து கொள்வோம்


உலகில் உள்ள மரங்களில் மில்லியனுக்கும் மேற்பட்டவை அணில்களால் உருவானவை என்றால் நம்ப முடிகிறதா.?

ஆம் அணில் தான் மழை காலத்திற்கான உணவை (விதைகள்) மண்ணில் புதைத்துவிடும் மழை காலத்தின் பொழுது அவை தான் புதைத்து வைத்த பாதி விதைகளை மறந்துவிடும் அவையே மரமாக வளர்கின்றன.



இவை எகிப்து'ல் கிடைக்கப்பெற்ற கல் சிற்பம்..
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது....
இன்று நாம் பயன்படுத்தும் விமானம் அன்றைய எகிப்து நாகரிகத்தில் எப்படி...?
கேள்விக்கான முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்....



இரும்புத்தூண் – டெல்லி..!

டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது ஆச்சாியமே.!

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!


இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

நதிகளும், அமொிக்காவின் சதிகளும்


உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதி தான்.

இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள். அமெரிக்காவால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸிஸிபி நதிதான் என்று அடம் பிடித்தது.
இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது.
அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நைல் என்பது ஒரே நதி.

ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை.
மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன.
இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்க வில்லை.

இதேபோல்தான் நயாகரா விஷயத்திலும் நடந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ருவைரா நீர்வீழ்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. இங்கு ஒரு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 காலன் நீர் விழுகிறது.

ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது.

உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது.

வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.
அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை.
லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி.

இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான்.
ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான்.
அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அடம்பிடிச்சு சாதிப்பது இது தானோ??

தமிழ் இனி..


தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே கட்டுரையாக..

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.

2. உறவுகளை அழைக்கும் போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப் பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிர்ப்படுபவர் தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது முகவரி அட்டை (VISITING CARD) களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிர்ப்படுபவரிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் அஞ்சல் தாள் (LETTER HEAD) போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள்.

8. திருமணப்பரிசு அளிக்கும் போது நல்ல தமிழ்ப் புத்தகங்ககளை அளியுங்கள்.

9. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

10. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

11. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

12. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

13. எதெற்கெடுத்தாலும் ‘EXCUSE ME’ என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்... மன்னிக்கனும்... மன்னிச்சுங்குங்க... என்று சொல்லுங்கள். அதே போல் ‘PLEASE’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

14. மகிழுந்துகளில் செல்லக் குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

15. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

16. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. (தமிழ் வளரும்).

இதை நடைமுறைக்கு கொண்டு வருவது சிரமம் காரணம் நாம் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம் நாம் நினைத்தால் போறாது அனைவரும் இதை செயல் படுத்த முயற்சி எடுக்க வேண்டும். எல்லோரும் இதை முயற்சிப்போம்.

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’


அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Area 51 !!


நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...ஏதோ என்னால் முடிந்தது....

#பொருத்தமான இடத்தில் படங்கள் போட முடியமையினால் அந்த இடத்தில் படங்களுக்கான links இணைக்கப்பட்டுள்ளது
ஏரியா 51 என்பது வேற்றுகிரகவாசிகளை பரிசோதிக்கும் இடமாக உள்ளது. இது எப்போது ஒரு ரகசிய யாடமாகவே இருக்கிறது. "Independence Day" என்ற ஆங்கில படத்தில் கூட அந்த இடம் தெளிவாக காட்டி இருப்பார்கள். மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவத்தளம் தான் இந்த ஏரியா 51. நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின்(Groom Lake) தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத்தளம். இந்த இராணுவ தளத்தின் முதன்மை வேலையானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதுதான்.

https://lh5.googleusercontent.com/-Yr1LW6Dmdyo/TXX0cxDsYPI/AAAAAAAAHj8/NIwZiYaOelA/s1600/uf001-50.jpg

அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, அதன் அருகிலுள்ள 186 மைல் (300 km) மொஜாவெ பாலைவனத்தின்(Mojave desert) எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே சொல்கிறார்கள்.

https://lh3.googleusercontent.com/-0QJNKK4s0Ck/TXX0enyz13I/AAAAAAAAHkE/Xk1mEAmAq-w/s1600/area-51-1.jpg

இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது. யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 miles (64 km) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.

குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க விமானப் படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது.லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது தான் ஆச்சர்யம்.

https://lh6.googleusercontent.com/-cQM_SeKGo2M/TXX0boUmazI/AAAAAAAAHj0/P1kJHC3Cg50/s1600/area-51.jpg

இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன.நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.

ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950-களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது.

https://lh6.googleusercontent.com/-0GGg4pAZDPs/TXX0a0jtAuI/AAAAAAAAHjw/ukSqQ5hQzeI/s400/area_51.jpg

ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் Ph.D பட்டத்தையும் வாங்கினார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:

https://lh6.googleusercontent.com/-KacDQhnLueM/TXX0cAGE96I/AAAAAAAAHj4/-UwQz8QA90Q/s400/area51ufo2.jpg

* 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.

* 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.

* டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."

* வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.

* இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.

* ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.

* NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.

https://lh4.googleusercontent.com/-D8h382MjY6g/TXX0fo0cwsI/AAAAAAAAHkI/eBDXWWRxBUo/s640/Area_51_28_August_1968_4.jpg

* திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

* சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.

* ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.

* ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மேலும் இந்த லிங்கில் சென்று வேற்றுகிரகவாசிகளின் படங்கள் மற்றும் இந்த பூமியில் அவர்கள் வந்து போன தடயத்தை விட்டு சென்றுள்ளதையும் காணலாம்.

http://www.spicx.com/2011/04/aliens-photo-collection-250-images.html

திருப்தியா நண்பர்களே ?

எலிகள் பற்றிய தகவல்கள்



எலி (rat) பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி. சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன.

மேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்குதெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும்.

சுண்டெலி
எலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி. இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்) வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை. புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை. வீடுகளிலில் அட்டகாசம் செய்வதும் இவைதான்.

வெள்ளெலி
பெயருக்கு ஏற்ப இவ்வகை எலிகளின் அடிப்பாகம் வெண்மை நிறமாகவும் உடலின் மேல்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். இந்த எலி மனிதர்களால் உண்ணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் வரப்புகள், புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை. பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன. இவ்வித எலிகள், வேறு வேறு இடங்களில் இரண்டு, மூன்று வளைகள் தோண்டி அவை அனைத்திற்கும் பூமிக்குள் ஒன்றுக்குகொன்று தொடர்பை ஏற்படுத்தி விட்டிருக்கும். இவை இரவில் இரை தேடும் இயல்புடையவையாகும். புன்செய் தானியங்களை சேகரித்து வளைக்குள் சேமித்து வைத்து இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுதும். பல எலிகள் கூட்டாக வாழும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை மண்ணால் அடைத்து வைத்திருக்கும். அப்படியும் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக வளைதோணடி மேல் மண்ணைத் திறக்காமல் வைத்திருக்கும். அதை மக்கள் மூட்டு என்று அழைப்பார்கள். வளை வழியாக ஆபத்து வரும்போது மூட்டை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளும்.
கருவுற்ற எலி கூட்டமாக வாழும் எலிகளின் மத்தியில் குட்டிகளை ஈன்றால் பிற எலிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் கருவுற்ற எலியும் ஆணெலியும் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வளை தோண்டி அதில் தங்கி குட்டிகளை ஈன்று வளர்க்கும். ஒரே ஒரு வளை மட்டுமே காணப்பட்டால் அது குஞ்சுகள் வளரும் வளை என கணித்து விடலாம். கூட்டமாக எலிகள் வாழும் எலி வளைகளை வளையின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு அடி உள்ளே தள்ளி வளையை மண்ணால் மூடியிருக்கும். ஆனால் குட்டிகள் வளரும் வளையை நுழை வாயிலிலேயே மூடியிருக்கும். இந்த எலி வளை தோண்டுதல், இரை தேடுதல், பகைவர்களிடமிருந்து காத்துகொள்ள ஓடுதல், எதிர்காலத்திற்கு உணவை சேமித்தல், இரை தேடியபின் தினசரி வளையை மண்ணால் மூடுதல் ஆகிய வேலையை செய்வதால் இவை வலிமையோடு இருக்கும்.

மூஞ்சூறு
இந்த எலி வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இது வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலி மக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலியை யாரும் கொல்வது இல்லை. பெட்டி, பீரோ, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.

கல்லெலி
இது சுண்டெலியை விட சற்று பெரியதாக காணப்படும். கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும். இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும். கொல்லையில் இவை காணப்பட்டாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை.

சரவெலி
இந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும், நார்களாலும் கூடுகட்டி வாழும். இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும். பகலில் மரத்திலிலேயே இருக்கும்.

பெருச்சாளி
இந்த எலி உருவத்தில் பெரியது. அதனால், இதனை கிராமத்து மக்கள் பெருச்சாளி என்று அழைக்கின்றனர். இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே வசிக்கும். வேலியோரங்கள், கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும். இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர். தோட்டத்தில் உள்ள கிழங்குகள், தானியங்கள், மனிதர்களால் வெளியில் வீசப்படும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.

வயல் எலி
இவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேதத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.

வலிக்கும் உண்மைகள்..


1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5. மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

6. கோலி, கண்ணாமூச்சி,கல்லா மண்ணா முதலிய விளையாட்டுக்களை விளையாடிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9. ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.

10. ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற இனிப்புகளை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.

இது எல்லாத்தையும் விட பெற்றவா்களை அம்மா, அப்பானு தமிழ்ல கூப்பிட்ட கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.

புற்றுநோயை குணப்படுத்தும் நித்தியகல்யாணி


 
மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தாவரம் நித்திய கல்யாணி. இது களர், மற்றும் சதுப்பில்லாத நிலத்திலும் வளரும். இது எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையது. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.பல காலமாக இதை வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள்.

நித்தியகல்யணியின் பிறப்பிடம் மடகாஸ்கர். மேலும் இந்தோனேசியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் பரவியுள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, முதலிய பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் . . .

ஆல்கலாய்டுகள், வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)

மனநோய்களை குணமாக்கும் . . .

இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.

புற்றுநோய்க்கு மருந்து . . .

இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். லுக்கேமியா மற்றும் லும்போமா புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் நித்தியகல்யாணியில் உள்ள ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமான வேதிப்பொருளாகும். ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

நீரிழிவுநோய் கட்டுப்படும் . . .

நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

வருமானம் தரும் நித்யகல்யாணி . . .

நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செடி வளர்ந்து 6 வது,9 வது மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்கள் உழுது எடுத்துப் பதப்படுத்தி வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??


துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே..

மறுபிறவி(Reincarnation) சம்பவம்


 
1949 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் நடந்த சம்பவம் இது. அந்தக் குடும்பத்தின் வயதான மனிதர் ஜார்ஜ். அறுபது வயதைக் கடந்த அவர் அந்தக் குடும்பத்து மனிதர்கள் மீது குறிப்பாக தனது மகன், மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். ’நான் இறந்தாலும் இங்கேயே மீண்டும் குழந்தையாகப் பிறப்பேன்’ இது ஜார்ஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் வாசகம்.

ஜார்ஜ் எப்போதும் தங்கச் செயின் பூட்டிய ஒரு கடிகாரத்தை விரும்பி அணிவார். ஒருநாள் மீன் பிடிப்பதற்காகச் செல்ல முற்பட்ட ஜார்ஜ் அதனை தனது மகனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு கடலுக்குள் சென்றார். சென்றவர் சென்றவர் தான், அவர் படகையும் காணவில்லை. ஆளும் கிடைக்கவில்லை. நாட்கள், மாதங்கள் கடந்தன. அவரைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் விபத்தில் இறந்து போயிருப்பார் என நினைத்து குடும்பத்தினர் மனதைத் தேற்றிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்தது. மூத்த மகனுக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அப்படியே ஜார்ஜின் சாயலில், அவருடைய உடல் அமைப்புடன், அவருக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குமோ அந்த அமைப்புடன் பிறந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அது வளர வளர, பெற்றோர்களை அம்மா, அப்பா என்று அழைப்பதற்கு பதிலாக மருமகளே, மகனே என்றும் அழைக்க ஆரம்பித்தது.

ஒருமுறை மூத்த மகன் தனது தந்தையின் நினைவாக, அவர் கொடுத்த தங்க கடிகாரத்தை அணிந்து கொள்ள முற்பட்ட போது ‘அது என் வாட்ச், என் வாட்ச்’ எனக்கு வேண்டும் என்று சத்தமிட்டு அழுதது குழந்தை. மேலும் சிறுவயதிலேயே மீன் பிடி படகுகள் பற்றி, படகுத் துறை பற்றி தௌ;ளத் தெளிவாகக் கூற ஆரம்பித்தது. இதில் விசே‘ம் என்னவென்றால் மீன்பிடி படகுத் துறைப் பக்கமே அந்தக் குழந்தை போனதில்லை என்பதுதான். அதுமட்டுமல்லாமல் ஜார்ஜிற்கு எதில் எதிலெல்லாம் ஆர்வம் மிகுந்திருந்ததோ அதிலெல்லாம் சிறுவனும் வளர வளர ஆர்வம் மிகுந்தவனாக இருந்தான்.

அவனுடைய குறிப்புகளையும், ஜார்ஜின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆராய்ந்த ஸ்டீவன்சன் ஜார்ஜின் மறுபிறவியே அந்தச் சிறுவன் என்பதும் குடும்பத்து உறுப்பினர்கள் மீது கொண்ட அன்பால் அவர் மீண்டும் வந்து அவர்களிடையே பிறந்திருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தினார்.

சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!


சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான தண்ணீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

ஜில் தண்ணீர் வேண்டாமே

ஜில்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜில் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

நாஸ்கா கோடுகள்


 
இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது.
பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திர்க்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவேளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான மனைகொடுகள் அவை. 1994 ல் “உலக தொல்லியல் பாரம்பரிய தளம்” என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?

இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது...

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!

இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

Saturday, 18 July 2015

"மரு" (Skin Tag) உதிர



இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

முடிந்தவரை பகிருங்கள்....பகிருங்கள்....பகிருங்கள்..

நீரழிவு ( Diabetes ) நோயாளிகளுக்கான உணவு அட்டவணை


சாப்பிடக் கூடாது:

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

அளவோடு சாப்பிடலாம்:

1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.

அளவில்லாமல் சாப்பிடலாம்:

1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.

பறவைகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி..!


ஆம், உண்மைதான்!

டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது.. [Lake Natron, Tanzania]

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்!

இங்கு தண்ணீா் குடிக்கும் பறவைகளும், பிற உயிா்களும் அந்த நீாில் உள்ள ரசாயனத்தினால் இறந்து சிலையாகி விடுகின்றன.

அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

வாட்டர் தெரபி


காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.

தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது
1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,

2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,

7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,

4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,

3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,

10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,

மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.

பிரி ரெயிஸ் வரை படம் - (Piri Reis Map)


1929 ஆம் ஆண்டில் சில வரலாற்று ஆய்வாளர்கள் துருக்கி அரச மாளிகையில் மான் தோலில் வரையப்பட்ட ஒரு வரை படத்தைக் கண்டெடுத்தனர்.அந்த வரை படத்தை ஆய்வு செய்ததில் அது ஒரு உண்மையான ஆவணம் என்பதும் துருக்கிய ஆட்டமோன் மன்னரது கடல் படையில் உயரதிகாரியாக (அட்மிரலாக) இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் 1513 ஆம் வருடம் வரையப்பட்ட வரை படத்தின் பகுதி என்பதும் தெரிந்தது.

பிரி ரெயிஸ் வரைபடக்கலையில் (கார்டோக்ராஃபி) பேரார்வம் கொண்டிருந்தார். தனது ஆர்வத்தூண்டலினாலும், தனது கடல் அனுபத்தில் கிடைத்த தகவல்கள், வரைபடத் துண்டுகள், நூலகத்தில் கிடைத்த வரைபடங்கள் குறிப்புகள் இவற்றைக் கொண்டு அவர் ஒரு வரை படத்தை தொகுத்தார், துருக்கி படையில் அவருடைய உயரிய அந்தஸ்துள்ள பதவியினால் புகழ் பெற்ற கான்ஸ்டான்டிநோபிலில் இருந்த அரச வம்சத்து நூலகத்திலிருந்த ஆவணங்களை அணுகிப் பார்வையிட வாய்ப்பு அவருக்கு இருந்ததும் இந்த வரை படத்தை சித்தரிப்பதில் அவருக்கு மிக்க உறுதுணையாகி விட்டது.

தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும், ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையையும் இன்னும் சில பகுதிகளையும் அந்த வரைபடத்தில் அவர் சித்தரித்திருந்தார். இத்தனைக்கும் அவர் தென் அமெரிக்கக் கடற்கரைக்குச் சென்றதோ அதைக் கண்ணால் கண்டதோ இல்லை. அவருடைய வரை படத்தில் காணப்படும் பல்வேறு குறிப்புக்களிலேயே பிரி ரெயிஸ் தன்னுடைய வரைபடம் பல்வேறு மூல வரைபடங்களிலிருந்து தொகுத்தெழுதப்பட்ட ஒன்றே என்றும் அவற்றில் சில மூல வரைபடங்கள் கி.மு 400 முதலாக அல்லது அதற்கும் முன்னால் எழுதப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மூல வரைபடங்கள், குறிப்புகள் ,செய்திகள் இவற்றின் மூலமே தொகுத்தளிக்கப்பட்ட வரைபடத்தில், கண்ணால் காணாத இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ள துல்லியம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.

கண்டெடுக்கப்பட்ட பிறகு மிகவும் விவாதத்துக்குள்ளான பிரி ரெயிஸின் வரைபடம் ஆப்பிரிக்காவின் மேற்குக்கடற்கரையையும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும் மற்றும் அண்டார்டிகாவின் வடக்குக் கடற்கரையையும் ??!! சித்தரிப்பதாக சில வரைபட வல்லுனர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்ன என்கிறீர்களா.. இந்த வரைபட காலத்தில் அண்டார்டிகா என்ற கண்டம் கண்டு பிடிக்கப் படவே இல்லை. வரைபட காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அண்டார்டிகா என்ற கண்டம் கண்டறியப்பட்டது. அதோடல்லாமல் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதியானது கிட்டத்தட்ட 1000 அடி கனமான பனியின் கீழ் மறைந்திருக்கிறது. அந்தப் பகுதியை யாராவது பார்த்திருந்து வரைபடத்தில் குறிக்க வேண்டுமானால், அது அந்தப் பகுதியில் பனியில்லாத காலமான கடைசி ice age காலத்திற்கு முற்பட்ட காலமாக இருந்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன்னால்.

நமக்குத் தெரிந்த வரலாற்றில் மனித நாகரீகம் தொடங்கியதே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான். அப்படியானால் அதற்கும் முன்னால் நாகரீக வளர்ச்சியடைந்த, வரைபடங்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய ஒரு சமூகம் இருந்ததா என்ற கேள்வி எழுந்து அதிர வைக்கிறது. அப்படி இருந்திருந்தால் எந்தச் சுவடும் இல்லாமல் எப்படி அழிந்திருக்கக் கூடும் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. அதோடல்லாமல் இந்த மூல வரைபடங்களை வரைந்தவர்களுக்கு உலகம் உருண்டை வடிவமானது என்ற அறிவும் இருந்திருக்கிறது. வரைபட இயலில் சிறந்த ஆய்வாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்லிங்டன் மலோரி என்பவர் கோள கோணவியல் திரிகோண கணிதம் (spherical Trigonometry) நன்கு அறிந்தவர்களால் இந்த வரைபடங்கள் வரையப்பட்டிருக்கிறதென்றும், ஆகாய விமானத்தில் பறந்து ஏரியல் சர்வேயில் பார்த்திருந்தால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக வரைய இயலும் என்றும் கூறியிருப்பது இன்னும் திகைப்பில் ஆழ்த்துகிறது.

மறுபக்கத்தில் இது அந்தக் காலத்தில் கிடைத்த மூல வரைபடங்கள், கடலோடுபவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் கொண்டு பிரி ரெயிஸினால் தொகுக்கப்பட்ட சாதாரண வரைபடமே அன்றி அசாதாரணமாக ஒன்றும் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. பிரி ரெயிஸின் வரை படம் மிகத் துல்லியமானதல்ல.. தென் அமெரிக்காவின் கடற்கரையை (துல்லியமின்மை காரணமாக) வளைத்துக் காட்டப்பட்டிருக்கிறபடியால் அது அண்டார்டிகா கண்டத்தின் வட பகுதியைக் காட்டுவது போல் தோன்றுகிறதேயன்றி, அது அண்டார்டிகா கண்டத்தைக் காட்டவே இல்லை. மேலும் இது ஒரு ஆச்சரியகரமான வரைபடம் என்று வாதிடுபவர்கள் கேப்குட் என்ற அமெரிக்க அறிவியலாளரின் வாதத்தை மட்டுமே எடுத்து வைக்கிறார்களே அன்றி ஆய்வுகள் மேற்கொண்டு நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் எதிர் வாதிடுகின்றனர்.

எது எப்படியோ, சாதாரணமாக தொகுக்கப்பட்ட வரைபடமா அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மனித இனத்துக்கு மிகவும் மேம்பட்ட அறிவியல் ஞானம் இருந்ததா என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் இன்றும் அவிழ்க்க முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே நீடிக்கிறது பிரி ரெயிசின் வரைபடம்.

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா...?


1) கையெழுத்துப் போட்டு விட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்...

நீங்கள் தைரியமானவர்கள். நல்லவர் தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. ,

சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...

ரொமான்டிக் பார்ட்டி. உடை மாற்றுவது போலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள். மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள்.

அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...

கூல் பார்ட்டி. சிம்பிளாக இருப்பீர்கள். பிடிக்காதவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ, கோடோ கிடையாதா ?

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான். அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். இதில் பாரக் ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...

கமுக்க பார்ட்டி நீங்கள். உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம். கொஞ்சம் புத்திசாலியும் கூட. இந்த ஸ்டைலின் கீழ் மர்லின்

மன்றோ, கபில்தேவ்..இருப்பவர்கள்.

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...

புத்திசாலி பார்ட்டிகள். ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள். ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் .. அடங்குவர்.

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...

நல்லவர். ஆளுக்கும், சூழலுக்கும தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள். ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள். பில் கிளிண்ட்டன்,

மன்மோகன் சிங் இதில் அடங்குவர் ..

8.) வெறுமனே பெயரை எழுதி வைத்தால்...

அம்மாஞ்சி. பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள். இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா?

ஓல்டு பார்ட்டிகள். பாரம்பரியக்கலை பிடிக்கும். முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட

வி.ஐ.பி. சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

படிச்சது போதும். இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்...

Wednesday, 15 July 2015

சமையல் எரிவாயு


நாள்தோறும் நாம் பயன்படுத்துகிற சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்தை நாம் என்றேனும் எண்ணிப்பார்ப்பதுண்டா.. அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நமக்கேது நேரம் என்கிறீர்களா?

ஒரு நிமிடம் மட்டும் அதற்கு ஒதுக்குங்களேன்.. ஒரு பெரும் ஆபத்தை தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதற்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும்.

எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின் ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும்.

அது மேலிருக்கும் மூன்று வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம், காலவதியாகும் தேதி போட்டிருக்கும்.
Image

அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C...இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

மேற்கண்ட படத்தில் B.21 என்று போட்டிருக்கிறது. இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது இரண்டாயிரத்து இருப்பத்தொன்றாவது வருடத்தையும் குறிக்கிறது.

ஜனவரி, பிப்ரவரி,மார்ச் முதல் காலாண்டு A ஏப்ரல்,மே,ஜூன் இரண்டாம் காலாண்டு B ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும்.

அதுபோலவே தங்களுடைய சமையல் எரிவாயு கலனில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.. ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அதுபோலவே பெற்றுக்கொண்ட கொள்கலனை பாதுகாப்பான முறையில் திறந்து பழகிக்கொள்ள வேண்டும்.

மேல் மூடியை அதில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை நம்மை நோக்கி வருமாறு ஒரு கையில் இழுத்து வைத்துக்கொண்டு, மறு கையில் அம்மூடியை மேலே இழுத்து மூடியை அகற்றலாம். நாம் பாதுகாப்பாக கையாலும் முறைகளாலும் பெரும் ஆபத்தை தவிர்க்கலாம்.! எதுவும் வருமுன் காப்பதே சிறந்ததல்லவா....!!

காட்டையே உருவாக்கிய தனி மனிதர் - ஜாதவ் பயேங் !


உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது. எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16. பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.
இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.
ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான்.
அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை
கரையச் செய்கிறது.
இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.
பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Friday, 3 July 2015

தமிழ்நாட்டில் காடுகள் பற்றிய சிறு விபரம்.


காடுகள் புதுப்பிக்கப்படக் கூடிய ஒரு வளம். நமது வாழ்க்கைக்குத் தேவையான மரம், எரிபொருள், தீவனப்பொருள், தோல் பதனிடத் தேவையானப் பொருட்கள், அரக்கு, பிசின், தாவரஎண்ணெய், முலிகைகள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றைக் காடுகள் அளிக்கின்றன. தமிழ்நாட்டின் காடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

அவை;

1.வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக்காடுகள்:

1500 மி. மீட்டர்ககும் அதிகமான மழைப்பொழிவு உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளின் வெப்ப மன்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் உள்ளன. மரங்கள் உயரமாகவும், அகன்றும் உள்ளன. பெரும்பாலும் கடின மரங்களாக உள்ளன.

2.வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க் காடுகள்:

மலைகளின் உயரம் குறைவதாலும் மழைப் பொழிவின் அளவு 1500மில்லி மீட்டர் வரை குறைவதாலும் வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் மெதுவாக வெப்ப மண்டல ஈரமான இலையுதிக் காடுகளாக மாறிவிடுகின்றன.

3.வெப்ப மண்டல வறண்ட இலைடயுதிக் காடுகள்:

மழைப் பொழிவு 1000 மில்லி மீட்டர்முதல் 1500 மில்லி மீட்டர் வரை உள்ள பகுதிகளில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர்க் காடுகள் கானப்படுகின்றன. வெப்பமான, வறண்ட காலததில் நீராவிப்போக்கைக் குறைப்பதற்காக மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன.

4.முட்புதர்கள், குட்டையான தாவரங்கள்:

நீண்ட வறண்ட காலத்துடன் கூடிய 1000மில்லி மீட்டர்க்கும் குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் முட்புதர்களும், குட்டையான தாவரங்களும் உள்ளன.

5.மாங்குரோவ் காடுகள்:

கிழக்குக் கடற்கரையில் குறிப்பாக வேதாரண்யம் மற்றும் பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள காடுகளின் பரப்பில் சுமார் 60% நீலகிரி மாவட்டத்திலும், சுமார் 20% சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. தர்மபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சந்தனமரங்கள் முக்கியமாக உள்ளன. கட்டுமான மரங்கள் கோயம்புததூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கின்றன. கன்னியகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கலும் காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கற்பூர தைல மரங்கள் செறிந்துள்ளன. மேற்க்குத் தொடர்ச்சி மலைகளின் கீழ்ச் சரிவுகளில் குறிபபாக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தீக்குச்சி தயாரிப்பதற்கான மரங்கள் வளர்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 21, 700 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காடுகள் உள்ளன. இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பின் சுமார் 18% ஆகும்.

காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருபது அனைவரும்
அறிய வேண்டியது.

நம்மால் இந்த நகர வாழ்க்கையில் காடுகளை உருவாக்க முடியுமா என்று கேட்டால் முடியாது. ஆனால் நாம் இருக்கும் வீட்டில் செடிகளையோ அல்லது ஒரு மரத்தையாவது வளா்த்துப் பாதுகாப்போம்.

உங்களுக்கு தொியுமா..


1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

மர்மக் காடு!


ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர்.
யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது.

இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.
மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் பறிகொடுத்தது. மெர்லினை வேறு யாரும் தட்டிச் சென்று விடாமல் தனக்கு மட்டுமே உரியவனாக வைத்திருக்க நினைத்தது அந்த தேவதை. அந்த மந்திரவாதியை சுனைக்குள் கண்ணுக்குத் தெரியாத, தண்ணீரால் நிரப்பப்பட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தது.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்தச் சுனையில் எதையாவது நினைத்து சீட்டு எழுதிப்போட்டால் உடனே நடக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.
இந்த அடர்ந்த பெரிய காட்டில் ஒரு குட்டை உள்ளது. அதில் எப்போதும் நீர்க்குமிழிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்தத் தண்ணீர் நம் ஊரில் இருப்பதைப் போல சூடாக இல்லாமல் ஜில்லென்று குளிர்ச்சியாகவே இருக்கிறது.

இவ்வாறான நீர்க்குமிழிகள் குட்டையில் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக் காட்டில் வருவதுதான் வியப்பளிக்கிறது.
மேலும், இக் குட்டையைச் சுற்றி சில பாறாங் கற்களும் கிடக்கின்றன. அதில் குறிப் பிட்ட பாறாங்கல் ஒன்றை மட்டும் மிகவும் விசேஷ மாகக் கூறு கின்றனர். காரணம், குட்டையின் நீரை அள்ளிச் சென்று இந்தப் பாறாங்கல்லின் மீது சிறிதாகத் தெளித்தால் நம்பவே முடியாத அற்புதம் ஒன்றும் நிகழ்வதாகக் கூறுகின்றனர்.

அது என்ன அற்புதம்?
தண்ணீர் தெளித்த மாத்திரத்திலேயே அந்தப் பகுதியில் மட்டும் வானம் உடனடியாகக் கருத்து விடுகிறதாம். காற்று வேகமாக வீசுமாம். கருப்புக் குதிரையில் கருப்பு நிற ஆடை அணிந்த சில துர் தேவதைகள் அங்கே உடனடியாக வருகிறதாம்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வில்லை. ஆனால். இதனைச் சோதனை செய்து மிரண்டு போனதாகச் சிலர் சொல் கின்றனர்.

இப்படிப்பட்ட திகில் நிறைந்த காட்டிற்கு டுசெல்டிக்ட் என்ற அந்தப் பழங்குடியின மக்கள் இப்போதும் எந்தப் பயமும் இல்லாமல் சென்று வரத்தான் செய்கின்றனர். மந்திரங்களை ஜெபிக்கின்றனர். அதனைப் பரிசோதித்துப் பார்க்கவும் செய்கின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் ஜுன் மாதம் 21ம் தேதி அன்று இந்த மக்கள் சுனைக்கு வருகின்றனர். பிறந்த குழந்தைகளை சுனை நீரில் நீராட்டும் தங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சடங்குகளை இன்றும் தவறாமல் செய்து வருகின்றனர். இதனைப் பெரிய சடங்காகவே அவர்கள் செய்கின்றனர். என்றாலும் இந்த விழாவில் வெளியாட்கள் யாரையும் அவர்கள் அனுமதிப்பதே கிடையாது.
இக்காட்டில் திடீர் திடீரென்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிவதும் உண்டு. ஆனால், சாதாரணமாக காற்றில் மரங்கள் ஒன்றோ டொன்று உரசி தீப்பற்றிக் கொள்வதைப் போல இங்கே நடப்பதில்லை. ஆனால், தீப்பற்றி எரிகிறது.
என்ன காரணத்தினால் இவ்வாறு நெருப்பு பற்றி எரிகிறது என்பது தெரியவில்லை. ஆனால், நகரசபை ஊழியர்கள் மட்டும் நெருப்பை அணைக்க ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ப்ரோசல்யான்டே காடு இருப்பது வளர்ந்த நாடாகக் கருதப்படும் ஐரோப்பாவின் பிரான்சில். படித்தவர்களும், அறிவாற்றல் நிறைந்தவர்களும் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தான் இக்காடு உள்ளது. இப்படிப்பட்ட மர்மங் களும், திகிலும் நிறைந்த ஒரு பயங்கரமான காட்டைப் பற்றிய அச்சம் காரணமாக இன்றளவும் இந்தக்காடு ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறது.